பாலத்தீன தனிநாடு வலியுறுத்தப்படுகிறது

 முன்வைக்கப்படுகிறது. இதில், பாலத்தீன தனிநாடு வலியுறுத்தப்படுகிறது. பாலத்தீன தனி நாட்டை அமைப்பது நீண்டகால ஸ்திரத்தன்மைக்கு இன்றியமையாதது என அமெரிக்கா நம்புகிறது.

ஆனால், இந்த விவகாரத்தை அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய அரசாங்கங்கள் “வெவ்வேறு விதங்களில் பார்ப்பதாக” கடந்த வாரம் வெள்ளை மாளிகை ஒப்புக்கொண்டது.

ஏறக்குறைய ஒரு மாதத்திற்குப் பிறகு இரு தலைவர்களும் முதல் முறையாக தொலைபேசி வாயிலாக பேசினர். அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய ஜோ பைடன் “இரு நாடுகள்” தீர்வு எட்டப்படுவதற்கு இன்னும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரிவித்தார்.

“இரு நாடுகள் தீர்வில் பல வகைகள் உள்ளன. ஐ.நா.வில் அங்கம் வகிக்கும் பல நாடுகளுக்கு சொந்த ராணுவம் இல்லை,” என்று அவர் கூறினார்.

மீண்டும் உறுதிப்படுத்திய நெதன்யாகு

அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

ஆனால், தன்னுடைய அரசியல் வாழ்க்கையின் பெரும்பகுதியில், ‘இரு நாடுகள்’ தீர்வு மீது தனக்கிருக்கும் எதிர்ப்பு நிலைப்பாட்டை வலுப்படுத்தி வந்துள்ள நெதன்யாகு, மீண்டும் அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “ஹமாஸ் அழிக்கப்பட்ட பின்னர், காஸா இனி இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இருக்காது என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இது பாலத்தீன இறையாண்மை கோரிக்கைக்கு முரணானது. காஸா மீதான பாதுகாப்பு கட்டுப்பாட்டை இஸ்ரேல் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடனான உரையாடலில், பிரதமர் நெதன்யாகு தனது கொள்கையை மீண்டும் வலியுறுத்தினார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள மேற்குக் கரைப் பகுதியையும் உள்ளடக்கிய பகுதியான ஜோர்டானின் மேற்கே இஸ்ரேல் “பாதுகாப்புக் கட்டுப்பாட்டை” வைத்திருக்க வேண்டும் என்று சனிக்கிழமையன்று பெஞ்சமின் நெதன்யாகு எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

பிரிட்டன் பாதுகாப்பு செயலாளர் கிரான்ட் ஷாப்ஸ் நெதன்யாகுவின் அறிக்கை “ஏமாற்றம் அளிப்பதாக” இன்று (ஜன. 21) கூறினார். ஆனாலும் அவருடைய கருத்து ஆச்சரியமளிக்கவில்லை என கிரான்ட் ஷாப்ஸ் தெரிவித்தார்.

நெதன்யாகுவின் கருத்துகள், காஸா நெருக்கடியைத் தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் பாலத்தீன தலைவர்கள் மத்தியில் எழுந்துள்ள ராஜிய ரீதியிலான பேச்சுவார்த்தைகளையும் அமைதி செயல்முறைகளுக்கான நம்பிக்கையையும் குறைக்க வழிவகுக்கும்.

காஸாவிற்குள் ஹமாஸால் பிடிக்கப்பட்ட இன்னும் 130 பணயக் கைதிகளின் நிலை என்னவென்று தெரியாத நிலையில், இஸ்ரேலில் சொந்த மக்கள் மத்தியில் எதிர்ப்புகள் எழுந்திருக்கும் மத்தியிலும் நெதன்யாகு போரை தொடர்வதை ஆதரிக்கிறார். இதன் மூலம் மற்ற நாடுகளிடமிருந்து இஸ்ரேல் தனிமைப்பட்டு வருவதையும் நெதன்யாகு அதிகரித்து வருகிறார்.

அக்டோபர் 7 அன்று தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலில் சுமார் 1,300 பேர் கொல்லப்பட்டனர். அவர்களுள் பெரும்பாலானோர் பொதுமக்கள் ஆவர். மேலும் 240 பேரை பணயக்கைதிகளாக ஹமாஸ் பிடித்துச் சென்றது.

இன்னும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் சனிக்கிழமையன்று டெல் அவிவில் கூடி, பணயக்கைதிகளை விடுவிப்பதற்காக தற்காலிக போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தனர்.

இஸ்ரேல் மக்களின் கோரிக்கை

பணயக்கைதிகளை விடுவிக்க தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவிக்குமாறு இஸ்ரேல் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

அக்டோபர் 7-ம் தேதி பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட ஒருவரின் உறவினரான கில் டிக்மேன் கூறுகையில், “அன்புள்ள பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, நீங்கள் அவர்களை (பணயக்கைதிகளை) மீண்டும் இங்கு கொண்டு வர முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்” என தெரிவித்தார்.

“நீங்கள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இஸ்ரேல் குடிமக்களுக்கு வெற்றியை கொண்டு வர முடியும் என்று எங்களுக்குத் தெரியும். பணயக்கைதிகளை இஸ்ரேலுக்கு அழைத்து வாருங்கள்” என்றார்.

கான் யூனிஸில் பதுங்கி இருப்பதாக நம்பப்படும் ஹமாஸின் உயர்மட்ட அதிகாரிகளைத் தேடுவதாகக் கூறி இஸ்ரேலியப் படைகள் தெற்கு காஸாவுக்குள் நுழைந்துள்ளன.

கான் யூனிஸில் பணயக்கைதிகளை வைத்திருக்கப் பயன்படுத்தப்பட்ட ஒரு சுரங்கப்பாதையை தாங்கள் சோதனை செய்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தெரிவித்தன. இருப்பினும் அந்த சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்ட போது அவர்கள் அங்கு இல்லை.

இஸ்ரேல் – ஹமாஸ் மோதலின் கவனம் இப்போது தெற்கு காஸாவை நோக்கி உள்ளது. இஸ்ரேல் தனது படையினரையும் பீரங்கிகளையும் தெற்கே முன்னேற்ற முயன்றபோது ஹமாஸ் குழுவினர் முன்னேறியதால், வடக்கு நகரமான ஜபாலியாவைச் சுற்றி மீண்டும் மோதல்கள் ஏற்பட்டுள்ளன.

இஸ்ரேல் காஸா மீது தரைவழிப் படையெடுப்பைத் தொடங்கி கிட்டத்தட்ட மூன்று மாதங்களில், ஹமாஸை விட மேம்பட்ட இஸ்ரேல் ராணுவம் இன்னும் அப்பிரதேசத்தில் குறிப்பிடத்தக்க எதிர்ப்பை எதிர்கொள்கிறது.

அக்டோபர் 7 முதல் அப்பிரதேசத்தில் 25,105 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் மேலும் 60,000-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் காஸாவை நிர்வகிக்கும் ஹமாஸின் சுகாதார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை கூறியது.

Exit mobile version