BREAKING

11 months ago
11 months ago
Uncategorized

சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான பொதுக் கூட்டமைப்பு ஒன்றை எதிர்காலத்தில் உருவாக்குவது தொடர்பில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில், கொழும்பு – டாலி வீதியிலுள்ள சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி தற்போது நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களான அனுர பிரியதர்சன யாப்பா, நிமல் லான்சா மற்றும் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, நளின் பெர்னாண்டோ மற்றும் இராஜாங்க அமைச்சர் ஜகத் புஸ்பகுமார ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர் என்று கூறப்பட்டுள்ளது.

சுதந்திரக் கட்சி தலைமையில் புதிய கூட்டமைப்பு: கொழும்பில் முக்கிய கலந்துரையாடல் | New Alliance By Freedom Party Maithripala

கம்யூனிஸ்ட் மற்றும் சமசமாஜ கட்சி

அத்துடன், சிறிலங்கா  சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாரதி துஷ்மந்த மித்ரபால, அமைச்சர் மகிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றிருந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts