அண்டார்டிகாவில் பயணிகள் விமானத்தை பனியில் தரையிறக்கி சாதனை

குயின் மவுட் லேண்ட்: முதன் முறையாக பனி பிரதேசமான அண்டார்டிகாவில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்திருக்கிறது. பூமியிலிருந்து பல பில்லியன் கி.மீக்கு அப்பால் இருக்கும் யுரேனஸ் கிரகம் கண்டுபிடிக்கப்பட்டதற்கு பிறகுதான் நமது பூமியில் அண்டார்டிகா எனும் எனும் ஒரு கண்டம் இருக்கிறது என்பதையே கண்டுபிடிக்க முடிந்தது. அந்த அளவுக்கு மர்மமான பகுதிதான் இந்த அண்டார்டிகா. முழுக்க முழுக்க பனியால் சூழப்பட்டிருக்கும் இந்த கண்டம்தான் உலகின் மிகப்பெரிய பாலைவனம். இங்கு எந்த மரத்தையும் உங்களால் பார்க்கவே முடியாது.

மண் இருந்தால்தானே மரம் இருக்கும்? அண்டார்டிகாவில் தோராயமாக 2.16 கி.மீ உயரத்திற்கு ஐஸ் அடர்த்தியாக இருக்கிறது. அதற்கு கீழ்தான் மண், மணல் எல்லாம்.  ஆனால் இந்த கண்டத்தில் பல லட்சம் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த உயிரினங்கள், தாவரங்களின் படிமங்கள் இன்னும் அப்படியே பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. எனவே இதை ஆய்வு செய்வதற்காக ஆயிரக்கணக்கில் விஞ்ஞானிகள் இங்கு தங்கி இருக்கின்றனர். இவர்களை அங்கு அழைத்து செல்லவும் திரும்ப கொண்டு வரவும் பெரும்பாலும் ராணுவ விமானங்களையே உலக நாடுகள் பயன்படுத்தும்.

ராணுவ விமானங்கள் எந்த அளவுக்கு கரடு முரடான பாதையிலும் தரையிறங்கும் திறனை கொண்டிருக்கும். அதற்கேற்ப விமானிகளும் கடினமான பயிற்சிகளை பெற்றிருப்பார்கள். அப்படி இருக்கையில் உலக வரலாற்றில் முதன் முறையாக அண்டார்டிகாவில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கி சாதனை படைத்திருக்கிறது. நார்ஸ் அட்லாண்டிக் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் விமானம்தான் இந்த சாதனையை படைத்திருக்கிறது. கடந்த 15ம் தேதி அண்டார்டிகாவின் குயின் மவுட் லேண்ட் எனும் இடத்தில் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தை விமானிகள் தரையிறக்கியுள்ளனர்.

நார்வே நாட்டிலிருந்து 45 விஞ்ஞானிகள் மற்றும் 12 டன் பொருட்களுடன் புறப்பட்ட இந்த விமானம் தென்னாப்பிரிக்காவில் தரையிறங்கி எரிபொருளை நிரப்பியது. பின்னர் சுமார் 40 மணி நேர பயணத்திற்கு பிறகு அண்டார்டிகாவில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது. இந்த விமானத்தில் மருந்து பொருட்கள், உணவு, ஆராய்ச்சிக்கான உபகரனங்கள், ஆக்சிஜன், சிறு சிறு வாகனங்கள், எரிபொருள் ஆகியவை கொண்டு வரப்பட்டுள்ளன. உலகக்கோப்பை ஃபைனலில் ஸ்பெஷல் நிகழ்வு.. சாம்பியன் கேப்டன்களுக்கு கௌரவம்.. அடடா.. அவரை மட்டும் காணோமே! இந்த சாதனை குறித்து நார்ஸ் அட்லாண்டிக் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் ceo கூறுகையில், “இந்த வரலாற்று சாதனை எங்களுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. அண்டார்டிகாவில் மேற்கொள்ளப்படும் ஆய்வில் நாங்களும் தற்போது இணைந்திருக்கிறோம். இந்த சாதனை மூலம் எங்களின் விமானிகள், பணியாளர்கள் மற்றும் எங்களிடம் உள்ள போயிங் விமானங்களின் திறன் என்ன என்பதை நிரூபித்திருக்கிறோம்” என்று கூறியுள்ளார். சுமார் 3 கி.மீ நீளம் கொண்ட விமான ஓடுபாதையில் இந்த விமானம் தரையிறக்கப்பட்டிருக்கிறது. இது வழக்கமான நீளம் கொண்ட ரன்வேதான். ஆனால் கொஞ்சம் மிஸ் ஆனாலும் விமானம் இழுத்துக்கொண்டு சென்றுவிடும் அபாயம் இருந்தது. எனவே மிக பத்திரமாக பயணிகள் விமானம் தரையிறக்கப்பட்டிருக்கிறது.

.

என்ன மக்களே அண்டார்டிகாவுக்கு ஒரு ரவுண்டு போவோமா?

Exit mobile version