BREAKING

11 months ago
11 months ago
விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிரடியான அரிய வாய்ப்பு

இலங்கை அணி பங்கேற்கும் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் சுப்பர் 4 சுற்றின் முதலாவது போட்டி கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று(09.09.2023) பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

Sri Lanka Squad for ICC World Cup 2023, Schedule 2023, Match List, Team List, Players List

டிக்கெட் விலை

அதேவேளை ஆசியக் கிண்ண கிரிக்கட் போட்டியின் சுப்பர் 4 சுற்றுக்கான டிக்கெட் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு அறிய வாய்ப்பு | An Opportunity For Sri Lankan Cricket Fans

இதன்படி கொழும்பு ஆர்.பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள சுப்பர் 4 சுற்றுப் போட்டிகளைக் காண 1,000 ரூபாவிற்கு டிக்கெட்டுகள் கிடைக்கப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொழும்பு ஆர்.பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் (Lower Block) சி மற்றும் டி  பிரிவில் செப்டம்பர் 9, 12, 14, 15 ஆகிய திகதிகளில் நடைபெறும் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை விளையாட்டு ரசிகர்கள் 1,000 ரூபாவுக்குவாங்க முடியும் என கூறப்பட்டுள்ளது.

இதனிடையே இன்றைய போட்டி மழையால் இரத்து செய்யப்பட்டால் நாளை(10.09.2023) போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இன்றைய போட்டிக்கு வாங்கப்பட்ட டிக்கெட்டுகள் நாளை(10.09.2023) செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 மில்லியன் டொலர்களை மக்களுக்காக வழங்கும் இலங்கை கிரிக்கெட் சபை

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

No Content Available